Canada

கனடாவில் காற்றில் பறந்த கார்:

கனடாவின் ஒண்டாரியோவில் ரயில் பாதையை கடந்து விட வேண்டும் என்பதற்காக அதி வேகத்தில் வந்த ஒரு கார், சாலையில் வேகத்தை குறைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மேட்டில் ஏறியதால் காற்றில் பறந்த காட்சிகள் அங்கிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளன.

பறந்து சென்ற அந்த டெஸ்லா கார் 100 அடி தொலைவிலுள்ள பள்ளி ஒன்றின் பார்க்கிங் லாட்டில் மோதி நின்றது.

அந்தக் கார் வந்த வேகத்திற்கு அதில் பயணித்தவர்கள் என்ன ஆனார்களோ என்று சென்று பார்த்தபோது ஆச்சரியப்படும் விதமாக அதில் பயணித்த இருவருக்குமே லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தது.

அபாயகரமாக காரை செலுத்தியதற்காக அந்தக் காரின் ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த நபர் தனக்கு மட்டும் ஆபத்தை ஏற்படுத்தாமல், எதிரே வேறு கார் ஏதேனும் வந்திருந்தால் அவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

<

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top