Canada

கனடாவில் சிறந்த நடைமுறைகளை யாழ்.மாநகரத்துடன் இணக்கம் ..

கனடாவிற்கு சென்றுள்ள யாழ்ப்பாண நகர மேயர் இமானுவேல் ஆனோல்ட்டிற்கும், மார்க்கம் நகர மேயர் Frank Scarpitti இற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் யாழ் நகரை மீளக் கட்டியெழுப்புவதிலுள்ள பல சவால்கள் தொடர்பிலும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மீள்கட்டமைப்பு முயற்சிகள் தொடர்பிலும் யாழ் மேயர் ஆர்னோல்ட் இதன்போது விளக்கமளித்துள்ளார்.

மேலும், கழிவு மேலாண்மை, நகர திட்டமிடல் மற்றும் பராமரிப்பு போன்ற முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் மார்க்கம் நகர மேயரின் உதவியை கோரியுள்ளார். இதன்போது மேயர் Frank Scarpitti தமிழ் சமூகத்தை அங்கீகரிப்பதில் மார்க்கம் நகர் எடுத்த முயற்சிகள் தொடர்பிலும் அதில் கிடைத்த வெற்றி தொடர்பிலும் எடுத்துரைத்துள்ளார். அத்துடன், மார்க்கம் நகரத்தின் சிறந்த நடைமுறைகளை யாழ்ப்பாணத்துடன், பகிர்ந்து கொள்வதற்கும் மார்க்கம் நகர மேயர் Frank Scarpitti இணக்கம் வெளியிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top