Canada

கனடாவில் டிராக்டர் மற்றும் பேருந்து விபத்தில் 10 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கனடாவின் Saskatoon நகரில் உள்ள Kerrobert பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தன்று கூலி தொழிலாளர்கள் 16-பேர் பேருந்தில் நெடுஞ்சாலை 21, 31, 51 வழியாக பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிராக்டர் மற்றும் பேருந்து தனது கட்டுப்பாட்டை மீறியதில் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இந்த விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த (CBC) பொலிஸார் இந்த விபத்து பற்றி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News

To Top