கனடாவில் பூட்டப்படாத வாகனங்களில் குழந்தைகளை தனியாக விட்டுச் செல்வது தொடர்பாக பொலிஸார் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சஸ்கச்சுவானில் காரொன்று ஆறு வயது குழந்தையுடன் கடத்திச் செல்லப்பட்ட சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தது. குறித்த சம்பவத்தை அடுத்தே பொலிஸார் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தையின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு சட்டங்கள் காணப்படுகின்ற போதிலும், வாகனங்களில் குழந்தையை விட்டுச் செல்வது தொடர்பாக எவ்வித குறிப்பிட்ட சட்டங்களும் இல்லை என ரெஜினா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் பொலிஸாரின் தீவிரத் தேடுதலின் பயனாக குழந்தை நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
இச்சம்பவத்தை அடுத்து குறித்த குழந்தையின் தாயின் பொறுப்பற்ற செயலை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.