கனடாவில் பெற்றோர் விடுப்பு 3 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய திட்டத்தினால் மேலதிகமாக 24,000 பெற்றோர்கள் நன்மை பெறுவர் என மத்திய அரசு தெரிவிக்கின்றது.
மத்திய குடும்பங்கள், பிள்ளைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் Jean-Yves Duclos, புதன்கிழமை இதனை அறிவித்துள்ளார்.
இப்புதிய ஐந்து வார மேலதிக விடுப்பு அனுகூலம் தகுதி பெறும் பெற்றோர்களிற்கு 2019 மார்ச் முதல் கிடைக்க கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்ததை விட மூன்று மாதங்கள் முன்னராக வழங்கப்பட உள்ளது. ஒரே பாலின பெற்றோர்களிற்கும் இந்த அனுகூலம் வழங்கப்படும்.
பிறந்த பிள்ளைகள் அல்லது தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களும் தகுதியுடையவர்களாவர்.
பிள்ளைகள் வளர்ப்பில் ஆண் பெற்றோர்களும் சமமான பொறுப்புக்களை பகிர ஊக்குவிக்கும் நோக்கத்துடன் லிபரல் அரசாங்கம் இத்திட்டத்தை நடைமுறை படுத்துகின்றது.
இன்று வரை 85சதவிகித பெண்கள் பெற்றோர் விடுப்பை பெறுவதால் பணிகளிலிருந்து நீண்ட விடுமுறை பெறுகின்றனரெனவும் கூறப்பட்டுள்ளது.
இத்திட்டம் கியுபெக் மாகாணத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. கனடா பூராகவும் இதன் வெற்றி பிரதிபலிக்கும் என ஒட்டாவா நம்புகின்றது.