கனடிய பொருளாதாரத்தின் ஆகஸ்ட் வேலை இழப்பு 51K !

கனடிய பொருளாதாரம் ஆகஸ்ட் மாதத்தில் 51,600 நிகர வேலைகளை இழந்து யூலை மாதத்தில் ஏற்பட்ட பெரிய ஆதாயத்தை துடைத்தெறிந்து விட்டதுடன் வேலையற்றோர் விகிதத்தையும் உயர்த்தியுள்ளது. ஆகஸ்ட்டில் வேலையின்மை விகிதம் ஆறு சதவிகிதத்தை எட்டியுள்ளதெனவும் இது யூலையின் 5.8சதவிகிதத்திலிருந்து அதிகரித்துள்ளதெனவும் கனடா புள்ளி விபரவியல் தொழிலாளர் எண்ணிக்கை கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
\
5,000வேலை அதிகரிப்புக்களையும வேலையற்றோர் விகிதம் 5.9சதவிகிதத்தையும் பொருளாதார நிபுணர்கள் எதிர் பார்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வேலை வாய்ப்பு 92,000 பகுதி-நேர இழப்புக்களால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனாலும் உறுதியான பக்கமாக 40,400 முழு-நேர வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.