கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருதியேவின் சந்திப்பை நிராகரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

NAFTA-ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பிற்கான, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருதியேவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தை மோசமான நிலையில் காணப்படுகின்ற நிலையிலேயே இப்பேச்சுவார்த்தைக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இதுபற்றி நியூயோர்க்கில் இடம்பெற்ற வெளிநாட்டு உறவுகள் ஆலோசனை சபையின் சந்திப்பொன்றில், ஒரு அங்கமாக இச்சந்திப்பிற்கு கனேடிய பிரதமர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி அதனை நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று (புதன்கிழமை) பத்திரிகையாளர்களிடம் கூறிய ட்ரம்ப், கனடா எனக்கு பிடித்தமான நாடு. அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் காணப்படுகின்றனர். ஆனால், கனடாவின் தீர்வைகள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன.
அது மாத்திரமின்றி கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் பேச்சுவார்த்தை முறை குறித்து நாம் அதிருப்தி கொண்டுள்ளோம்.
எனவேம், நான் அவர்களுடனான பேச்சுவார்த்தையை விரும்பவில்லை என்றார்.
முன்னதாக, NAFTA-ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவும் மெக்சிகோவும் ஏற்கனவே இருதரப்பு உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ள வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.