காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை நேற்று முற்பகல் நாடாளுமன்றத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கட்டது.
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸினால் அவ் அறிக்கை ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த இடைக்கால அறிக்கை 6 மாத காலமாக நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.