காணாமல் போன 7-வயது பையன் பிணமாக கண்டு பிடிக்கப்பட்டான்!

கனடிய குழந்தை பாதுகாப்பு மையம் காணாமல் போன 7-வயது சிறுவன் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டமை குறித்த அறிக்கை ஒன்றை குடும்பத்தின் சார்பாக வெளியிட்டுள்ளது. தங்கள் மகன், சகோதரன், பேரன், மருமகன், மாமா மற்றும் உறவினர் அனைவரும் இவனின் இழப்பினால் பெருந்துயரத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வியாண்டில் பாடசாலை செல்ல ரமெய்ன் கிளெடென்ஹைஸ் மிக ஆவலாக இருந்துள்ளான். ஆகஸ்ட் 24லிருந்து கிரெகன் காணாமல் போனான்.ஆகஸ்ட் 25ல் இவனது தாய் ரமெய்ன் கிளெடென்ஹைஸ் சஸ்கற்சுவான், Fort Qu’Appelle பீச்சிற்கு அருகில் இறந்த நிலையில் கிடக்க கண்டு பிடித்தார்.
இவனது மரணத்தில் தவறான விதி மீறலிற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என தெரிவித்த ஆர்சிஎம்பி புலன்விசாரனை தொடர்வதாக கூறியுள்ளனர்.