News

கொழும்பு தலைநகரில் ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிப்பு!

கூட்டு எதிரணியினர் நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ள நிலையில் இன்று தலைநகரில் பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான பொலிஸாரை வரவழைத்துள்ளனர்.

நல்லாட்சி அரசிற்கு எதிராக நாளை கூட்டு எதிரணியினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டத்தில் சுமார் 5 இலட்சத்துக்கும் அதிமானோர் கலந்துகொண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்துவார்கள் என கூட்டு எதிராணியினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போராட்டத்தினை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், பொலிஸாரைக் கொண்டு அடக்க முயற்சி செய்வதாகவும் கூறி இன்று நாடாளுமன்றில் கூச்சல் குழப்பத்தை கூட்டு எதிரணியினர் ஏற்படுத்தியிருந்தனர்.

இருப்பினும் அவ்வாறான எந்தவொரு செயற்பாடுகளும் எடுக்கப்படவில்லை என பிரதமர் உட்பட சட்டம் ஒழுங்கு அமைச்சரும் தெரிவித்திருந்ததுடன், இந்த நாட்டில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top