Jaffna

கோர விபத்து ரயிலுடன் கார் மோதி : 4 பேர் பலி, இருவர் காயம்

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் ரயிலுடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயிலுடன் சிறிய காரொன்று பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் வைத்தே இவ்வாறு மோதுண்டே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது காரில் பயணித்த 8 பேரில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியானதுடன் இருவர் படு காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிறுவன் ஒருவனும் காரின் சாரதியும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே காரில் இருந்து பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top