அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாளை வாக்கு மூலமொன்றை பதிவு செய்து கொள்ள உள்ளனர்.
வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்திற்கு வருகை தருமாறு சரத் பொன்சேகாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் இவ்வாறு சரத் பொன்சேகா அழைக்கப்பட்டுள்ளார்.
நாளை நண்பகல் 12.00 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு சரத் பொன்சேகாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஒரு தடவை சரத் பொன்சேகவிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.