சிறுமியை துஸ்பிரயோகப்படுத்திய இராணுவ வீரர் கைது

சாலியவெவ – நீலபெம்ம பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகப்படுத்திய உட்படுத்திய குற்றச்சாட்டில் இராணுவ படை வீரர் ஒருவர் சாலியவெவ பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் திருமணமான 30 வயதுடைய நீலபெம்ம பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், அவர் இரணைமடு இராணுவ படைத்தளத்தில் பணிபுரிபவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விடுமுறைக்காக வீடு வந்திருந்த போதே இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாடுகளில் பதிவாகியுள்ளது.
வன்முறைக்குள்ளான சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக புத்தளம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.
சந்தேகத்திற்கிடமான இராணுவச் சிப்பாயை புத்தளம் மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சாலியவெவ பொலிஸார் மேற்கொள்கின்றனர்.