News

சில நொடிகளில் தூள் தூளான பிரமாண்ட பாலம்: வெளியான வீடியோ

சீனாவில் பிரமாண்ட பாலம் ஒன்று வெடிவைத்து தகர்க்கப்பட்டு தூள் தூளாகும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சீனாவின் Jiangxi மாகாணத்திலுள்ள Ji’an Ganjiang பாலம் Gan நதிக்கு மேலாக கட்டப்பட்டிருந்தது.

அதிகரித்துவரும் மக்கள்தொகையை அந்த பாலத்தால் தாங்க முடியாமல் போனதால் அதை இடித்து தள்ளுவது என அதிகாரிகள் முடிவு செய்தனர்.

23 ஆண்டுகள் பழமையான அந்த பாலத்தில் பல மாற்றங்கள் செய்தும் பாலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை.

இதனால் இறுதியாக அதை இடித்துவிட்டு புதிய பாலம் ஒன்றை கட்டுவது என முடிவு செய்யப்பட்டது.

பணியாளர்கள் பல டன் எடையுள்ள வெடிகளை பாலத்தின் தூண்களுடன் பொருத்தினர்.

பார்வையாளர் ஒருவர் எடுத்த வீடியோவில் 1,577 மீற்றர் நீளமுடைய அந்த பாலம் சில நொடிகளில் தூள் தூளாகப் போவதைக் காணலாம்.

இடிக்கப்பட்ட பாலத்திற்கு பதிலாக கட்டப்படவிருக்கும் 2,211 மீற்றர் நீளமுடைய புதிய பாலம் ஒன்று 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாக்கில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top