Canada

சீரியல் கில்லராக மாறிய கனடாவின் கோடீஸ்வரர்

கனடாவின் டொரண்டோ பகுதியைச் சேர்ந்த Wayne Millardஇன் மரணம் தற்கொலை என சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவரது மரணத்துக்கு காரணம் அவரது மகன் என்பதோடு மட்டுமல்லாமல், அவர் ஒரு சீரியல் கில்லர் என்னும் உண்மையும் வெளியாகியுள்ளது.

கண் வழியாக குண்டு பாய்ந்த நிலையில் Wayne Millard தனது படுக்கையில் இறந்து கிடந்தார், அவருக்கு அருகே ஒரு துப்பாக்கி கிடந்தது.

அது தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அவரது மகனான Dellen Millardம் தனது தந்தை மன அழுத்தம் மற்றும் மதுவுக்கு அடிமைப்பட்டிருந்தார் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஒண்டாரியோவைச் சேர்ந்த Bosma (32) என்னும் மனிதர் காணாமல் போனார், அவரது மனைவியின் உருக்கமான வேண்டுகோளின்பேரில் மொத்த நகரமே அவரைத் தேடி வந்தது.

அவரது ட்ரக் ஒன்றை Dellen Millardம் அவரது நண்பரான Mark Smichம் தான் அந்த ட்ரக்கை வாங்குவதற்காக, டெஸ்ட் ட்ரைவுக்காக Bosmaவுடன் சென்றவர்கள்.

பின்னர் அந்த ட்ரக் Millardன் தாய்க்கு சொந்தமான பண்ணையில் கிடைத்தது. அத்துடன் அங்கேயே முற்றிலும் எரிந்து சாம்பலான நிலையில் ஒரு உடல் கிடைத்தது, ஆனால் அதில் DNA சோதனை செய்ய இயலாத அளவுக்கு அது எரிந்து போயிருந்தது.

Dellen Millard மற்றும் அவரது நண்பரான Mark Smich மீது Bosmaவைக் கொன்றதாக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பொலிசாரின் பார்வை இவர்கள் இருவர் மீதும் விழுந்ததும், Millard சம்பந்தப்பட்ட இன்னொரு காணாமல் போன நபரின் வழக்கை பொலிசார் மீண்டும் தொடங்கினார்கள். Laura Babcock என்னும் அந்தப்பெண் Millardஇன் முன்னாள் காதலி.

பின்னர் இருவரின் காதலும் முடிவுக்கு வந்தாலும் அவர்களுக்கிடையே பாலுறவு மட்டும் தொடர்ந்தது.

இது Millardஇன் புதிய காதலியாகிய Christina Noudgaவுக்கு பெரிய தொல்லையாக இருந்தது.

Laura அடிக்கடி தானும் Millardம் தொடர்ந்து உறவிலிருப்பதாக Christinaவுக்கு செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்தாள். இதனால் அவளுக்கும் Millardக்கும் சண்டை ஏற்பட்டது.

பின்னர் Millard, Lauraவை காலி செய்து விடுவதாக Christinaவுக்கு செய்திகள் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் Lauraவை Millard கொலை செய்து தான் வாங்கியிருந்த மின் எரியூட்டும் கருவியில் வைத்து எரித்து விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இத்தனை பிரச்சினைகளுக்குப் பின் ஒருவேளை Millardதான் அவரது தந்தையையும் கொன்றிருப்பாரோ என்ற கோணத்தில் விசாரிக்கத் தொடங்கியபோது துப்பாக்கியிலிருந்த Millardஇன் DNA உட்பட பல ஆதாரங்கள் சிக்கின.

இவ்வளவிற்கும் பின் நேற்று முன்தினம் Millardதான் அவரது தந்தையையும் கொலை செய்தார் என்பது உறுதி செய்யப்பட்டு அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரது தந்தை புதிதாக தொடங்கிய தொழில், சொத்துக்களை நஷ்டமடையச் செய்யும் என்பதால், சொத்துக்களின் வாரிசான Millard, தனது சொத்துக்களை இழக்காமல் இருப்பதற்காக தந்தையைக் கொலை செய்ய முடிவு செய்தது தெரிய வந்துள்ளது.

மூன்று கொலைகளை திட்டமிட்டு செய்ததால், Millard ஒரு சீரியல் கில்லர் என முடிவு செய்யப்பட்டதோடு ஏற்கனவே வழங்கப்பட்ட ஆயுள் தண்டனைகளுடன் அவரது தந்தையைக் கொன்றதற்கான தண்டனையும் வழங்கப்பட உள்ளது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top