News

சுற்றுலா பயணிகள் மீது கொலைவெறித் தாக்குதல்: ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இருவர்

நெதர்லாந்தில் முக்கிய ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் மீது நபர் ஒருவர் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பயங்கரவத தொடர்பு என பொலிசார் அறிவித்துள்ளனர். தலைநகர் ஆம்ஸ்டர்டமில் அமைந்துள்ள முக்கிய ரயில் நிலையத்தில் குறித்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. 19 வயதேயான ஜாவித் என்ற ஆப்கான் இளைஞர் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞர் சுற்றுலா பயணிகள் மீது கத்தியால் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. கயமடைந்த சுற்றுலா பயணிகள் இருவரும் அமெரிக்க நாட்டவர்கள் எனவும், தற்போது மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு இரையான இருவர் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர்.

நெதர்லாந்து பொலிசாரின் கோரிக்கையை ஏற்று ஜேர்மன் பொலிசார் குறித்த நபரின் குடியிருப்பில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அங்கிருந்து பல ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது தொடர்பில் மேலதிக தகவல் வெளியாகவில்லை. தற்போது விசாரணை கைதியாக உள்ள அந்த இளைஞர், திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த இருப்பதாகவும், அதன் பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top