சூறாவளி தாக்கம்: கனேடிய அரசு ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

கனேடியாவின் சூறாவளி தாக்கம் காரணமாக, அரசு ஊழியர்கள் இன்று பணிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனடா நாட்டின் தலைநகரமான ஒட்டாவா மற்றும் Gatineau-வில் வெள்ளிக்கிழமை மாலை முதல் கடுமையான சூறாவளி வீசியது. இந்த சூறாவளியில் சிக்கி 150,000க்கும் மேலானவர்கள் தங்களுடைய வீடுகளில் மின்சாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
அத்துடன், 30பேர்கள் வரை காயமடைந்துள்ளதுடன், ஐவர் படுகாயமடைந்து சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளியில் இருந்து இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு வர தற்போது அப்பகுதி மக்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக கனடா அரசு ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கனடா அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வருகை தர வேண்டாம் எனவும், முடிந்தால் வீடுகளிலிருந்தே பணிகளைக் கவனிக்குமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கனேடிய அரசாங்கம் தகவல் தெரிவித்துள்ளது.