ஜப்பானில் Jebi என்றுஅழைக்கப்படும் பயங்கர சூறாவளி கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுள்ளனர். நாட்டின் மேற்குக் கரையோரம் மணிக்கு 135 மைல் வேகத்தில் சூறைக் காற்று வீசுவதோடு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் பிரதமர் Shinzo Abe விரைந்து வீடுகளைக் காலி செய்யுமாறும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமாறும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜப்பானின் வானிலை ஆராய்ச்சி மையம் நிலச்சரிவுகள், பல மீற்றர்கள் உயரம் வரை அடிக்கும் அலைகள், மின்னல் மற்றும் சூறாவளி ஏற்படலாம் என எச்சரித்துள்ளது. வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் Kyoto ரயில் நிலையத்தின் கூரை இடிந்து விழுவதையும் பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடுவதையும் காணலாம். பலத்த காற்றில் 2,591 டன் எடையுள்ள லேங்கர் லொறி ஒன்று விமான நிலையத்தை இணைக்கும் பாலத்தில் மோதியது.
மேற்கு மற்றும் மத்திய ஜப்பானில் வசிக்கும் 1.19 மில்லியன் மக்களுக்கு வீடுகளை விட்டு வெளியேறுமாறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் 16,000 பேருக்கு பலத்த ஆனால் கட்டாயமற்ற வெளியேறும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.