ஞாபகார்த்த நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற நபர் கொலை!

ரொறொன்ரோ பெரும்பாகத்தில் 24-மணி நேரத்தில் நான்கு கொடிய கொலைகள் இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது. மைக்கேல் லூயிஸ் 30-வயது, அவரது இரு பிள்ளளைகள் மற்றும் கர்ப்பவதியான அவரது மனைவி அனைவரும் ரொறொன்ரோவில் நினைவு தின நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது சம்பவம் நடந்துள்ளது. பலதடவைகள் சுடப்பட்டுள்ளார்.
ரொறொன்ரோ டவுன்ரவுன் வாட்டர்வுரொன்ட் பார்க்கில் சுடப்பட்டு மரணமடைந்த ஒருவரின் ஞாபகார்த்த நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற போது சுடப்பட்டுள்ளார். மார்க்கத்தை சேர்ந்த இவர் நினைவு நிகழ்வு நடந்த கொர்னேசன் பார்க்கில் வைத்து ஞாயிற்றுகிழமை மாலை சுடப்பட்டார். நான்கு ஆண்கள் லூயிசுடன் விவாதம் நடாத்தியதாகவும் பின்னர் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து பலதடவைகள் சுட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சுடப்பட்டவர் சரிந்து விழ சந்தேக நபர்கள் ஓடிவிட்டனர்.சுடப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். சுடப்பட்ட நேரத்தில் பிள்ளைகள் இருவரும் அருகில் இருந்துள்ளனர். ரொறொன்ரோ பெரும்பாகத்தில் 24-மணித்தியாலங்களில் இடம்பெற்ற நான்காவது கொடிய துப்பாக்கி சூட்டு சம்பவம் இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களும் லாயிசும் ஒருவரை ஒருவர் தெரிந்தவர்களாக இருக்கலாம் என விசாரனையாளர்கள் நம்புகின்றனர். சூட்டு சம்பவம் இடம்பெற்ற போது 30 முதல் 40பேர்கள் வரை பார்க்கில் இருந்துள்ளனர்.