News

தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சிறுவன்!

ரஷ்யாவில் கணினி விளையாட்டில் தோலிவியை சந்தித்த 15 வயது சிறுவன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் Mogochino கிராமத்தில் குடியிருக்கும் சிறுவன் பவெல் மாட்வேவ், சம்பவத்தன்று தங்களது தோட்டத்துக்குள் புகுந்து அங்கிருந்த செயின்சா ஒன்றை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

இந்த விவகாரம் தொடர்பில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டுவரும் பொலிசார், சிறுவன் கணினி விளையாட்டில் தோல்வியை தழுவியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சிறுவன் பவெல் நாளின் பெரும்பாலான நேரம் அவனது தாயார் பரிசளித்த அந்த கணினியிலேயே நேரத்தை செலவிடுவதாக கூறப்படுகிறது. ஆனால் சம்பவத்தன்று எந்த விளையாட்டை சிறுவன் ஆடினான் என தகவல் வெளியாகவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top