News

தியாகி திலீபனின் 31 ஆவது நினைவுதினம் புதுக்குடியிருப்பில் அனுஸ்டிப்பு.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் தியாகதீபம் திலீபன் அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைதினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவு பந்தலில் திலீபனின் திருவுருவப்படம் வைத்து வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வணிக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வணிகர்கள் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சந்தை பகுதி வணிகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு திலீபனுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு வணிகர் கழக செயலாளர் கோல்டைன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை புதுக்குடியிருப்பு வணிகர் கழக தலைவர் செல்வச்சந்திரன் அவர்கள் ஏற்றி மலர் மாலையினை அணிவித்துள்ளார்.

தொடர்ந்து மலர் வணக்கத்தினை சமூக செயற்பாட்டாளர் அற்புதராசா அவர்கள் தொடக்கிவைத்துள்ளதை தொடர்ந்து பொதுமக்களால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top