தீயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிற்கு பாடசாலை செல்ல ஆடைகள் நன்கொடை!

ரொறொன்ரோ- சென்ட். ஜேம்ஸ் ரவுனில் அமைந்துள்ள உயர்ந்த தொடர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீயினால் இடம் பெயர்ந்த நூற்று கணக்கான பிள்ளைகள் மீண்டும் பாடசாலைக்கு திரும்பவும் புதிய ஆண்டில் செல்வதற்கு தேவையான ஆடைகளை நன்கொடையாக பெறுவர். ஆகஸ்ட் 21ல், 650 பாராளுமன்ற வீதியில் அமைந்து உயர் தொடர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட ஆறு அலாரம் தீ விபத்தில் கிட்டத்தட்ட 1,500 குடியிருப்பாளர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
கட்டத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட பாரிய மின்சார தீ வெடித்ததால் கறுப்பு நிற புகை கட்டிடத்தின் பல தளங்களினூடாக சென்றுள்ளது. ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் பிள்ளைகளின் ஆடைகள், பணம் மற்றும் தங்குமிட வசதிகள் வழங்குமாறு ரொறொன்ரோ மக்களிடம் உதவி கோரினார். இதனை தொடர்ந்து நூற்று கணக்கான பொருட்கள்-பாடசாலை உபகரணங்கள், ஆடைகள் போன்ற-பல குவியத் தொடங்கின.
96,000டொலர்கள் சேரந்தன. செஞ்சிலுவை சங்கத்தில் 112 வதிவிடங்கள் வழங்கப்பட்டன. பாடசாலை செல்லும் வயதுடைய பிள்ளைகளிற்கு ஆடைகள் சனிக்கிழமை தொடக்கம் காலை 10மணி முதல் றோஸ் அவெனியு பொது பாடசாலையில்-சென்ட்.ஜேம்ஸ் ரவுனில் அமைந்துள்ள- வழங்கப்படும்.