News

தைவானில் மோசமான கார் விபத்தில் தூக்கி எறியப்பட்ட சிறுவன் வீடியோ காட்சி!

தைவான் நாட்டில் நடந்த மோசமான கார் விபத்தில் 11 வயது சிறுவன் சாலையில் தூக்கி வீசப்படும் வீடியோ இணையத்தில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டில் அதிவேக சாலை ஒன்றில் கோரமான கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், Lee (39) என்பவர் முன்னே சென்று கொண்டிருந்த காரினை முந்தி செல்ல முயன்ற போது, நிலை தடுமாறி சிதறி தரையில் விழுந்தது.

இந்த கோரா விபத்தில் Lee தன்னுடைய 11 வயது மகனுக்கு பாதுகாப்பு பெல்ட் அணியாத காரணத்தினால், இருக்கையிலிருந்து சிறுவன் வெளியில் தூக்கி வீசப்பட்டான். அதேசமயம் மற்றொரு காரில் பயணித்த 8 வயது சிறுவன் மற்றும் சிறுமிக்கு அவர்களுடைய தந்தை பாதுகாப்பு பெல்ட் அணிவித்திருந்த காரணத்தால், கார் அந்தரத்தில் தூக்கி வீசசப்பட்டபோதும் கூட பாதுகாப்பாக இருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் தரப்பு கூறுகையில், விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதில் கவனக்குறைவாக வாகனம் ஒட்டிய குற்றத்திற்காக Lee-க்கு ரூ. 14,290 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top