Canada

தொடுவானத்தில் வழக்கத்தை விட வெப்பம்!

கோடை காலத்தின் இறுதி நாள் இன்று. ஆனால் வெப்பமான வானிலை இன்றுடன் முடிவிற்கு வரும் என கருத வேண்டிய அவசியமில்லை என கூறப்படுகின்றது. உண்மையில் வழக்கமான இலையுதிர் காலத்தை விட வெப்பமாக இருக்கும் என கனடா சுற்று சூழல் மற்றும் காலநிலை மாற்றம் கணித்துள்ளது.

கனடா முழுவதிலும் வழக்கத்தை விட வெப்பமாக காணப்படும் என அவர்களது இலையுதிர் கால கண்ணோட்டம் கணிப்பதாக கனடா சுற்று சூழல் மூத்த தட்ப வெப்பவியலாளர் டேவிட் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

சூடானதாக இருக்கும் என சொல்லவில்லை ஆனால் வழக்கத்தை விட வெப்பமானதாக இருக்கும் என கூறியுள்ளார்.

பூசணி மீது பனி இருக்கும் அத்துடன் இலையுதிர் காலம் முடி வடைவதற்கு முன்னர் பனியை வழிக்க வேண்டியும் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலையுதிர் ஆரம்பத்தில் கோடைகாலம் போன்று உணரப்படலாம். செப்ரம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளிப்புற வானிலை சிறந்ததாக காணப்படும் எனவும் கூறியுள்ளார்.

இந்த வருடம் கடந்த காலத்தை விட குளிர் பருவம் குறைவாக இருக்கும்.

கோடை காலம், பெருங்காற்று மேற்கு கரையோரத்தில் புயலுடன் றொக்கிஸ் மற்றும் சதுப்பு நிலப்பிரதேசங்களில் பனியுடனும் இந்த வாரம் முடிவடையும்.

குறுகிய கால தீவிர நடவடிக்கைகள் கொண்ட வானிலை ஒன்ராறியோ, கியுபெக் மற்றும் கனடாவின் கிழக்கு பிரதேசங்களில் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top