Canada

நகையை திருடி ஆன்லைனில் விற்க முயற்சித்த பெண் கைது!

நகை கடையில் திருடப்பட்ட நகையை ஆன்லைனில் விற்க முயற்சி செய்தது தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் அமைத்துள்ள ஒரு நகை கடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் கடையின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட அங்கிருந்த நகை திருடப்பட்டதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர், திருடப்பட்ட நகைகள் அனைத்தும் சுமார் 1000 கனேடியன் டொலர்களுக்கு வெர்மிலியிலிருந்து இருந்து ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது புலனாய்வுப் பிரிவினர் அறிந்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் திருடப்பட்ட நகைள் உள்ள இடத்தை கண்டுபிடித்து அங்கு சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், 33 வயதுடைய மேகன் அட்வுட் என்பவர் கைது செய்யபட்டத்துடன் , அவரிடமிருந்து நகைகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், அவரிடம் பொலிஸார் நடத்தப்பட்ட உள்ள தீவிர விசாரணையை தொடர்ந்து அடுத்த மாதம் 15 ஆம் தேதி அன்று வெர்மிலியன் மாகாண நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top