Canada

நோவ ஸ்கோசியாவில் 229 பேர்களின் உயிரை பலிகொண்ட விமான விபத்தின் 20-வது ஆண்டு !

Qஇன்றைக்கு 20வருடங்களிற்கு முன்னர் சுவிஸ் எயர் விமானம் 111 ஆகாயத்தில் இருந்து நோவ ஸ்கோசிய பெக்கி கோவில் கடலிற்குள் வீழ்ந்து ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்த கொடூர சம்பவம் நடந்தது.Qஇந்த 20-வருட சம்பவத்தை நினைவு கூர உறவினர் குடும்பத்தினர் மற்றும் சமூக அங்ககத்தவர்கள் சம்வம் நடந்த இடத்தில் ஒன்று கூடுகின்றனர்.

விமானத்தில் இருந்த அனைவரும் 229மக்கள் அந்த இடத்திலேயே மரணமடைந்தனர். அனைவருக்கும் ஒரு அழியாத குறி அவ்விடத்தில் விட்டு செல்லப்பட்டது. ஞாயிற்றுகிழமை பிற்பகல் 3மணிக்கு பலியான அனைவரையும் நினைவு கூரும் ஞாபகார்த்த சேவை பேஸ்வாட்டர் நோவ ஸ்கோசியா சுவிஸ்எயர் நினைவு தளத்தில் இடம்பெறுகின்றது. 1998 செப்ரம்பர் 2 இரவு உரத்த பலமான பூம் சத்தமும் சைரன்களின் ஒலியும் அப்பகுதி மீனவர்களை எழுப்பியதுடன் இப்பேரழிவிற்கு முதலில் பதிலளித்தவர்களும் அவர்களே. தங்கள் படகுகளில் ஏறி கடலில் சென்றனர்.

விமானத்தில் பாகங்கள் சிதறி எரிபொருளால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. எவருமே எதிர்பாராத ஒரு காட்சி. தண்ணீருக்குள் சென்று பார்த்த மீனவர் ஒருவர் பொம்மை ஒன்றை கண்டு அருகில் சென்று பார்த்தால் அது ஒரு சிறுபிள்ளை என தெரியவந்தது என தெரிவித்தார். ஆனால் அப்பிள்ளை உயிருடன் இல்லை. உடல் கரைக்கு கொண்டு வரப்பட்டது.

பொழுது விடிந்ததும் அதிகமானோர் அவ்விடத்தை வந்தடைந்தனர். இச்சம்பவத்தின் பின்னர் ஆறு ஆயிரம் நோவ ஸ்கோசிய மக்களிற்கு மதித்துணை வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் சில தங்கள் அன்பிற்குரியவர்களின் இறுதி மூச்சு நின்ற இடத்தில் இருக்க விரும்பி நோவ ஸ்கோசியாவிற்கு இடம்பெயரந்தனர். ஏனையவர்கள்1998லிருந்து வருடந்தோறும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top