Canada

பிரபல்யமானVaughan Mills சந்தேக நபர்கள்!

கடந்த வாரம் Vaughan Mills வாகன தரிப்பிடத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கமரா மூலம் பெறப்பட்ட மூன்று ஆண்களின் தோற்றங்களை புலன்விசாரனையாளர்கள் வெளியிட்டுள்ளனர். நெடுஞ்சாலை 400 கிழக்கு மற்றும் றதவோட் வீதியில் குறிப்பிட்ட மோலின் வாகன தரிப்பிடத்தில் ஆகஸ்ட் மாதம் 28 மாலை 7மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற நேரம் சந்தேக நபர்கள் மூவரும் பாதிக்கப்பட்ட ஒருவரும் வாகனங்களில் அவ்விடத்தை விட்டு அகன்று விட்டனர். சிறிது நேரத்தின் பின்னர் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் மனிதன் ஒருவர் ரொறொன்ரோ வைத்தியசாலை ஒன்றிற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். பாதிக்கப்பட்டவர் 22வயதுடைய ரொறொன்ரோவை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை சூட்டு சம்பவம் தொடர்பாக மூன்று ஆண்களின் கண்காணிப்பு கமரா காட்சிகளை வெளியிட்டுள்ளனர். அத்துடன் சம்பவ இடத்தில் இருந்த குறிப்பிட்ட சமயத்தில் வெளியேறிய வாகனம் ஒன்றும்Hyundai sedan கமராவில் பதிவாகி உள்ளது வெளியிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 1-866-876-5423, ext. 714 இலக்கத்தில் பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top