பிரம்ப்டன் பகுதியில் தாக்குதல் நடத்திய மூவர் கைது-6 பேர் தப்பியோட்டம்!

பிரம்ப்டன் பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் தப்பியோடி நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
பிரம்ப்டன் பகுதியில், கடந்த டிசம்பர் மற்றும் ஜூன் மாதத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இத்தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவமானது அங்குள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, கிடைக்கப்பட்ட சி.சி.டிவி காட்சிகளை வைத்து அப்பகுதி மக்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய, பிரம்ப்டன் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய குர்ப்ரீட் சிங், 19 வயதுடைய லவ்ப்ரீட் சிங் மற்றும் 20 வயதுடைய ஆர்பீந்தர் கில் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த வன்முறையில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள 6 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சந்தேக நபர்களின் பெயர்களை வெளியிட்ட பொலிஸார் அவர்களை பற்றி தகவல் வழங்குமாறும்
பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.