பிரான்சில் காவல்நிலையத்திற்கு அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்: பரிதாபமாக இறந்த இளைஞன்.

பிரான்சில் காவல்நிலையத்திற்கு அருகே இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதால், பரிதாபமாக பலியாகியுள்ளார்.
பிரான்சின் Athis-Mons பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவர் கடந்த திங்கட் கிழமை Juvisy-sur-Orge பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு அருகே நடந்து சென்றுள்ளார்.
அப்போது உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் அந்த இளைஞரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதனால் அந்த இளைஞன் படுகாயமடைந்துள்ளான். இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக அருகிலிருந்த காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த பொலிசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வயிற்றுப் பகுதியில் மிக ஆழமாக கத்தியால் குத்தப்பட்டதால், அந்த இளைஞன் முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஒரு சிலரே. அவர்களிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.