பிரான்ஸ் ராணுவ முகாமில் திடீர் தீவிபத்து! 6 வீரர்கள் படுகாயம்

பிரான்சில் ராணுவ முகாமில் எரிவாயு அடுப்புகள் வெடித்த விபத்தில், 6 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சின் Bois de Vincennes-யில் உள்ள காட்டுப் பகுதியில் ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தனர். இந்நிலையில், இன்று காலை ஓட்டப்பயிற்சி மேற்கொண்டிருந்த வீரர்கள் சிலர், முகாமில் அமைக்கப்பட்டிருந்த கூடாரம் ஒன்று தீப்பிடித்து எரிவதைக் கண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கிய ராணுவ வீரர்கள் தீக்காயமுற்ற 6 வீரர்களை மீட்டனர். அவர்கள் அனைவரும் நிவாரணக் குழுவின் உதவியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தீ விபத்தில் இரண்டு வீரர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எரிவாயு அடுப்புகள் வெடித்ததே இந்த விபத்திற்கு காரணம் என்று தெரிகிறது. மேலும் ராணுவ வீரர்கள் மட்டுமே இந்த தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.