News

பிரித்தானியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி மன்னன் கைது!

பிரித்தானியாவில் வங்கி பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டு சுமார் 113 மில்லியன் பவுண்டுகள் கொள்ளையிட்ட நபரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் வங்கி பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டு சுமர் 113 மில்லியன் பவுண்டுகள் கொள்ளையிட்டு சிக்கிய நபர் Feezan Choudhary.

சுமார் 750 அப்பாவி மக்களிடம் இருந்து சவுத்ரி இந்த மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரித்தானிய வரலாற்றில் வங்கி பரிமாற்றத்தில் நடைபெற்ற மிகப்பெரிய மோசடி இதுவெனவும், அதிகரிக்கும் நிதி மோசடியாளர்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை அளித்த வழக்கு இதுவெனவும் தெரியவந்தது.

இந்த வார துவக்கத்தில் வெளியான அறிக்கை ஒன்றில், வங்கி பரிமாற்ற மோசடி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்,

வாடிக்கையாளர்களிடம் இருந்து நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு மோசடி நடைபெறுவதாகவும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இருப்பினும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பித் தர மறுத்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களையே குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த ஆண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் பிரித்தானிய மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 145 மில்லியன் பவுண்டுகள் கொள்ளைபோயுள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 50 விழுக்காடு அதிகம்.

மட்டுமின்றி நாள் ஒன்றுக்கு 200 வாடிக்கையாளர்கள் இதுபோன்ற மோசடியில் சிக்கி பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இருப்பினும் கொள்ளையிடப்பட்ட 145 மில்லியன் பவுண்டுகளில் இருந்து சுமார் 31 மில்லியன் பவுண்டுகள் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

கிளாஸ்கோ நகரத்தில் குடியிருப்பவரான மோசடி மன்னன் சவுத்ரி, அப்பாவி வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து தொலைபேசி மூலம் ஏமாற்றியது விசாரணையில் அம்பலாமனது.

வாடிக்கையாளர்களை பேசியே ஏமாற்றி, அவர்களிடம் இருந்து வங்கிக்கணக்குகளின் உரிய ஆவணங்களை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளான்.

சில வாடிக்கையாளர்களிடம் 70 நிமிடங்கள் வரை தொடர்ந்து பேசி அவர்களிடம் இருந்து தகவல்களை பெற்றுள்ளான்.

மட்டுமின்றி கொள்ளையிட்ட பணத்தில் விலை உயர்ந்த பொருட்களை சவுத்ரி வாங்கிக் குவித்துள்ளான்.

தமது நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்படுவது தெரியவந்ததும் பிரித்தானியாவில் இருந்து பாரிஸ் பறந்த சவித்ரி பின்னர் அங்கிருந்து போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பாகிஸ்தான் சென்றுள்ளான்.

அதன் பின்னர் பிரித்தானியாவுக்கு திரும்பிய சவுத்ரி, விசாரணைக்கு ஒத்துழைப்பதாக அதிகாரிகளிடம் அறிவித்தான்.

அவனது கூட்டாளிகள் 19 பேர் இந்த வழக்கில் ஒட்டுமொத்தமாக 39 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளனர். சவுத்ரிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இதுபோன்ற விவகாரம் தொடர்பில் பிரித்தானியாவில் இதுவரை 34,128 வழக்குகள் பதிவாகியுள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top