News

பிரித்தானியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்!

பிரித்தனியாவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென பயணிகளுக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினிலிருந்து Leeds Bradford விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த ஜெட்2 விமானத்தில் பயணிகள் சிலருக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டதாக விமான நிலைய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து Yorkshire ஆம்புலன்ஸ் சேவையிலிருந்து 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விமான நிலையத்திற்கு விரைந்தன. அங்கு ஒரு மணி நேரத்திற்கு பின்னர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனையடுத்து 4 பயணிகளுக்கு உடல்நிலை சரியில்லை என கூறி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் அதில் இருவருக்கு மட்டுமே உடல்நலனில் குறைபாடு இருப்பதை அறிந்து கொண்டு, அவர்களுக்கு சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விமான சேவை நிறுவனம் கூறுகையில், சம்பவத்தில் 2 பயணிகளுக்கு மட்டுமே உடல்நலனில் குறைபாடு ஏற்பட்டிருந்தது. அவர்கள் இரண்டு பேரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற பயணிகள் அனைவரும் நலமுடன் இருப்பதை உறுதி செய்த அடுத்த நிமிடமே விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது. எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்பும், அக்கறையும் தான் முக்கியம் என தெரிவித்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top