Canada

பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய கனேடிய தாயார் !

கனேடிய இளம் தாயார் ஒருவர் இறந்த பிஞ்சு குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய வழக்கில், லண்டன் நீதிமன்றம் அவருக்கு தண்டனை விபரத்தை அறிவித்துள்ளது.

கனடாவின் Amherstburg பகுதியை சேர்ந்தவர், தற்போது 25 வயதான Samantha Richards.

இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தமக்கு பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி Richmond Row பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசியதாக வழக்குப் பதியப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், குறித்த இளம்பெண் தமது கர்ப்பத்தை ரகசியமாக பாதுகாத்து வந்ததாகவும், தாம் தங்கியிருந்த குடியிருப்பின் குளியலறையிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளதாகவும் தெரிவித்தது.

மேலும், குழந்தை பிறந்த உடன் அல்லது பிறக்கும்போதே இறந்து பிறந்ததாகவும், இதனால் அந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்று அவர் குப்பைத் தொட்டியில் வீசியதாகவும் தெரியவந்தது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் ஜூன் 18 ஆம் திகதி குறித்த இளம் தாயாரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், அவருக்கு தண்டனை விபரத்தை அறிவித்துள்ளது.

அதில் குறித்த இளம் தாயாருக்கு சிறை தண்டனை விதிக்கப்படவில்லை எனவும், ஆனால் 2 ஆண்டு காலம் நன்னடத்தை சோதனைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த 2 ஆண்டு காலத்தில் அவர் குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபட்டால் அவருக்கு சிறை தண்டனை வழங்கவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top