புதிய பாடசாலை ஆண்டில் மாணவர்களிற்கு இலவசமாக கிடைப்பவை?

வடக்கு எட்மன்டனில் புதிய பாடசாலை ஆண்டிற்கு தயாராகும் பிள்ளைகளிற்கு இலவச பாடசாலைக்கு தேவையான பொருட்கள், உணவு மற்றும் முடி வெட்டுதல்-இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது. இவற்றை பெறுவதற்கு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வரிசையில் நின்றனர்.
இந்த நிகழ்வு ஆறு ஆண்டுகளிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வருடாந்த நிகழ்வு தன்னை ஒரு வறுமை எதிர்ப்பு ஆர்வலர் என அறிமுகப்படுத்தி கொண்ட டான் ஜோன்ஸ்ரொன் என்பவர் தொடரந்து ஆறு வருடங்களாக செய்து வருகின்றார். தேவையில் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் ஒற்றை பெற்றோர்களிற்கு இவை வழங்கப்படுகின்றன. இந்த வருடம் கிட்டத்தட்ட 2,100மக்களிற்கு இப்பொருட்கள் வழங்கப்பட்டது.