புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவுதினம்

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜா ஜினேஸ் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
குளிர்பான தாகசாந்தியுடன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிகழ்வில், தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மாவீரர் ஒருவரது தாயான எம்.யோகேஸ்வரி என்பவரால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அதன் பின்னர் கட்சியின் முக்கியஸ்த்தர்கள், கட்சி ஆதரவாளர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.