பேர்லிங்டன் ஒன்ராறியோவில் பொலிசார் அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு!

பேர்லிங்டன் ஒன்ராறியோ– இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் பேர்லிங்ரன் எரிவாயு நிலையம் ஒன்றில் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் ஒருவர் இறந்து விட்டதாகவும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சுடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதிகாலையில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து விசேட புலன்விசாரனை பிரிவு விசாரனை செய்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் நிலைமை குறித்து பொலிசார் தகவல்கள் ஏதும் தெரிவிக்கவில்லை.
பொலிசார் சம்பந்தப்பட்ட மரணம் கடுமையான காயங்கள் அல்லது பாலியல் தாக்குதல் சம்பவங்கள் ஏற்படும் பட்சத்தில் SIU-விசேட புலனாய்வு பிரிவு அழைக்கப்படும்.