Canada

போர் காட்சி போல் தோன்றுகின்ற ஒட்டாவா!

வெள்ளிக்கிழமை சூறாவளி கிழித்தெறியப் பட்டதன் பின்னர் கிட்டத்தட்ட 150,000 ஒட்டாவா ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.

நகரின் பெரும்பகுதியை சூறாவளி இருட்டில் தள்ளியுள்ளதாகவும் தெரிவித்தார்.

புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் சேவையை மீட்டெடுக்க நாட்கள் செல்லலாம் என மேயர் எச்சரித்துள்ளார்.

புயலினால் பல மக்களும் காயமடைந்துள்ளனர்.

இப்பகுதியில் சில வெடிகுண்டுகள் போடப்பட்டது போன்று காணப்படுவதாக மேயர் தெரிவித்தார்.

ஒரு சினிமா காட்சி அல்லது போர்க்கள காட்சி போன்று காணப்படுகின்றது.

40வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது.

பனி புயலை விட மின்சார சேதம் மோசமானதாக காணப்படுகின்றது.

கிட்டத்தட்ட 80முதல் 90வரையிலான ஹைட்ரோ கம்பங்கள் புயலினால் தகர்க்கப்பட்டன.

ஒட்டாவா பூராகவும் 300-ற்கும் மேற்பட்ட போக்குவரத்து விளக்குகள் மின்தடைகள் காரணமாக செயலிழந்தன.

ஆயிரக்கணக்கான மக்கள் இருளில்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கியுபெக் முதல்வர் பிலிப்பே கோயில்லார்ட் தனது பிரச்சாரங்களை ரத்து செய்து விட்டு பாதிக்கப்பட்ட நகரத்திற்கு திரும்பியுள்ளார்.

அனைத்து ஒட்டாவா வைத்தியசாலைகளும் மின்சாரம் மீள கிடைக்கும் வரை காப்பு ஜெனரேட்டர்கள் உபயோகிக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்களிற்கு தங்குமிட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top