மகிந்தவின் பேரணி புஷ்வானமானது! அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் தகவல்

கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி புஷ்வானம் எனவும், விசில் அடித்த அளவுக்கு குத்துக்கரணம் அடிக்கவில்லை எனவும் சட்டம் மற்றும் ஒழுங்கு ராஜாங்க அமைச்சர் நளின் பண்டார இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் கூறியளவு மக்களை அவர்களால் அழைத்து வர முடியவில்லை. ஒரு பேருந்தில் 10 பேர் வரையிலேயே வந்தனர். திட்டம் தோல்வியடைந்துள்ளது.
இது நாட்டு மக்கள் அன்புடன் வந்த பயணமல்ல. ஒரு குடும்பம் ஆட்சியை பிடிக்க வந்த பயணம். கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை சீனாவுக்கு சொந்தமாக விற்பனை செய்தவர்கள் கொழும்பில் கால் பதிக்கவும் உரிமையற்றவர்கள். எப்படியான ஆர்ப்பாட்டங்களை நடத்தினாலும் அரசாங்கம் சளைக்காது. அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்கும் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.