News

மதிவெடி அகற்றும் பணியாளர் மிதிவெடி வெடித்து உயிரிழப்பு!

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒருவர் மிதிவெடி வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.இன்று(திங்கட்கிழமை) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பரவிப்பாஞ்சானைச் சேர்ந்த 24 வயதான பி.திலீபன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்போது மற்றுமொருவர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top