News

மனைவியின் தோலை உரித்து உடலை துண்டுகளாக்கி கழிவறையில் போட்ட நபர்..

அமெரிக்காவின் Missouriயைச் சேர்ந்த ஒரு நபர் இறந்த தனது மனைவியின் தோலை உரித்து அவரது உடலை துண்டுகளாக்கி கழிவறைக்குள் போட்டு ஃப்ளஷ் செய்துள்ளார். அதற்கு அவர் கூறியுள்ள காரணம், தனது மனைவி இறந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தால் தனது பிள்ளைகளை தன்னை விட்டு பிரித்து விடுவார்கள் என்பது. தனது பிள்ளைகள் மீது தனக்கு மிகவும் பிரியம் என்றும் அவர்கள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்றும் தெரிவித்துள்ள Justin Rey (36) என்னும் அந்த நபர் குடும்பத்துடன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார்.

அங்கிருக்கும்போது அவரது மனைவிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. பிரசவத்தில் அவர் இறந்து போனதாக தெரிவித்த Justin Rey, பின்னர் அவள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். இறந்த தனது மனைவியின் உடலுடன் பிள்ளைகளை நிற்க வைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்ட Justin, பிறகு அவளது தோல் முழுவதையும் உரித்து எடுத்திருக்கிறார்.

பிறகு அவளது உடல் பாகங்களை சிறு சிறு துண்டுகளாக்கி சிலவற்றை கழிவறைக்குள் போட்டு ஃப்ளஷ் செய்துள்ளார். பொலிசார் அவரையும் புதிதாக பிறந்த குழந்தை உட்பட இரண்டு குழந்தைகளையும் பல பைகளில் வைக்கப்பட்டிருந்த அவரது மனைவியின் உடல் பாகங்களுடனும் ஷெட் ஒன்றில் கண்டுபிடித்தனர். அவர் மீது அவரது மனைவியின் மரணத்திற்காக குற்றம் சாட்டப்படாவிட்டாலும் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியது, இறந்தவரின் உடலை கைவிட்டது போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவர்மீது தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top