மலிவு விற்பனையால் ஏற்பட்ட பரபரப்பு?

ரொறொன்ரோ-ஸ்காபுரோவில் அமைந்துள்ள நோபில்ஸ் பலசரக்கு கடை ஒன்றில் சோளம் மலிவு விற்பனை காரணமாக கூச்சல்கள், குழப்பம், மற்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்வம் மிக்க மக்கள் சோளம் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒருத்தரை ஒருத்தர் தள்ளிய வாறும் நெருக்கிய வாறும் இடிபட்டு இறுதியில் எதுவும் கிடைக்காதவாறு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவற்றிற்கான காரணம் என்ன? ஒரு டசின் சோளத்தின் விற்கும் விலை ஆக டொலர்கள் 1.68 மட்டுமே. கட்டுப்பாடற்ற குழப்பமான சூழ்நிலையை கண்ணுற்ற சன்னி காந்தி என்பவர் அதிர்ச்சியடைந்த நிலையில் இக்காட்சியை படமெடுக்க முடிவு செய்தார். தனது முக நூலில் பதிவு செய்ததிலிருந்து கிட்டத்தட்டட 600,000தடவைகள் பார்வையிடப்பட்டதாக தெரிவித்தார். போட் பெறி வில்லோட்றீ பண்ணையை சேர்ந்த ஜோடன் மக்கே வித்தியாசமான வகைகள் கொண்ட சோளத்தை விற்பனை செய்வதாக தெரிவித்தார்.