மாணவர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்.

டெட்ராயிட் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மீது 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்த வழக்கில் திடீர் திருப்பமாக அந்தப் பெண்தான் தன்னை பாலுறவுக்கு தூண்டியதாக அந்த மாணவர் அதிரடியாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
டெட்ராயிட் பல்கலைக்கழக lacrosse விளையாட்டு வீரரான Patrick Walsh (22) மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.
Patrick தன்னை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று தன்னுடன் வலுக்கட்டாயமாக பாலுறவு கொண்டதாகவும் பின்னர் தான் நிர்வாணமாக பாத்ரூமில் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும்போது அதை வீடியோ எடுத்து அவரது நண்பர்களுக்கு அனுப்பியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில் Patrick தான் அந்தப் பெண்ணுடன் பாலுறவு கொள்ளவில்லையென்றும் வீடியோ எடுத்து யாருக்கும் அனுப்பவில்லையென்றும் மறுத்துள்ளார்.
இருவரும் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொண்டதாகவும் அதன் பின்னர் நடந்த சில நிகழ்வுகளும்கூட அந்தப் பெண்ணின் சம்மதத்துடனேயே நடந்ததாகவும் தெரிவித்த Patrick, ஆனால் தாங்கள் பாலுறவு கொள்ளவில்லை என மறுத்துள்ளார்.

அது மட்டுமின்றி பாலுறவுக்கு முந்தைய சில நெருக்கமான நிகழ்வுகளுக்கு தன்னைத் தூண்டியதும் அந்தப் பெண்தான் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி அவள் வாந்தியெடுத்துக் கொண்டிருப்பதால், எப்படி உதவுவது என்று கேட்பதற்காகவே தனது நண்பர்களிடம் தொலைபேசி மூலம் ஆலோசனை கேட்டதாகவும் அவர் தெரிவித்தார். வழக்கு இன்றும் தொடர்கிறது.
