News

மாற்றுத் தலைமை வேண்டுமா? – விக்கிக்கு விரைவில் சம்பந்தன் பதிலடி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மாற்றுத் தலைமை வர வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு விரைவில் உரிய பதிலை வழங்குவேன் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபை கூடுதல் பணிகளைச் செய்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன் எனவும், உரிய நேரத்தில் வடக்கு மாகாண சபைக்குரிய எங்களுடைய முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்போம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தற்போதைய தலைமைகள் போய் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு பெற்று மாற்றுத் தலைமை உதித்தால் மீண்டும் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவேன் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார்.

விக்னேஸ்வரனின் இந்தக் கருத்து தொடர்பில் இரா.சம்பந்தனிடம் வினவியபோது,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மாற்றுத் தலைமை வர வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து. இதற்கு இப்போது என்னால் பதிலளிக்க முடியாது. எனினும், விரைவில் உரிய பதிலை வழங்குவேன். அதுவரை பொறுத்திருங்கள்” என்று தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top