Canada

முதியவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகன ஓட்டுநர்: தேடும் பணி தீவிரம்!

79 வயதுடைய முதியவர் ஒருவரை வாகனத்தால் மோதிவிட்டு வாகனத்துடன் தப்பிச்ச சென்ற ஓட்டுனரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த சம்பவமானது கிழக்கு ஷெப்பார்ட் அவென்யூ மற்றும் பிர்ச்மவுன் வீதியில் உள்ள அன்கன்கோர்ட் நேற்று (புதன்கிழமை) நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தன்று 79 வயது நிறைந்த முதியவர் ஒருவர், சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக விரைந்து வந்த கார் ஒன்று முதியவர் மீது மோதிவிட்டு விரைந்து சென்றது.

இதையடுத்து, தகவல் அறிந்து குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முதியவரை மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

எனினும், இந்த விபத்தை ஏற்படுத்தியவர் குறித்து ரொறொன்ரோ பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top