Canada

மூடப்படாத பெட்டிக்குள் அனுப்பபட்ட யு.எஸ்.இராணுவ துப்பாக்கிகள்?

இரண்டு இராணுவ தர தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் கைத் துப்பாக்கிகள் இரண்டு அடங்கிய மூடப்படாத பெட்டி ஒன்றிற்குள் வைக்கப்பட்டு மர்மமாக ரொறொன்ரோ பொம்பாடியர் திணைக்களத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. குறிப்பிட்ட ஆயுதங்கள் யு.எஸ்.அரசாங்கத்திற்கு சொந்தமானவை என படங்களில் தெரிவாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான பொதிக்குள் அமெரிக்க இராணுவத்தினரால் உபயோகிக்கப்பட்ட பெரெட்டா கைத்துப்பாக்கிகள் இரண்டு மற்றும் M4 assault rifles இரண்டு FedEx-மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 30ல் ரொறொன்ரோ டவுன்ஸ்வியுவில் உள்ள பொம்பாடியரின் கப்பல் ஏற்றுமதி திணைக்களத்திற்கு வந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பொதிகள் அனுப்ப பட்டுள்ளதாக ரசீது தெரிவித்திருப்பதாக அறியப்படுகின்றது. ஆனால் ஒன்று மட்டும் பொம்பாடியருக்கு வந்துள்ளது. மற்றயது எங்கு விநியோகிக்கப்பட்டது அல்லது பொதிக்குள் என்ன இருந்ததென தெளிவாக தெரியவில்லை.

விநியோகம் பல தரப்பட்ட கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. நான்கு துப்பாக்கிகள் எவ்வாறு எல்லைக்கு ஊடாக அனுப்ப பட்டது? இவற்றை அனுப்பியவர்கள் யார்? ஏன் பொம்பாடியருக்கு வந்தது? துப்பாக்கிகள் Spanish Fork, Utah,-தோராயமாக 38,000 கிட்டத்தட்ட 135கிலோ மீற்றர்கள் சால்ட் லேக் சிற்றியில் இருந்து ஆகஸ்ட் 29 அனுப்ப பட்டுள்ளதென பொதியின் கண்காணிப்பு இலக்கம் தெரிவிக்கின்றதாக கூறப்பட்டுள்ளது

அங்கிருந்து Memphis, Tenn.. அடைந்து நடுஇரவு மற்றும் அடுத்தநாள் மிசிசாகா, ஒன்ராறியோவை காலை 7.55ற்கு வந்தடைந்துள்ளது. பொம்பாடியரை ஆகஸ்ட் 30 அடைந்துள்ளது. பொலிசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.. பார்சல் உடனடியாக அவ்விடத்தை விட்டு அகற்றப்பட்டுள்ளது. விசாரனைக்காக ரொறொன்ரோ பொலிசாரிடம் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டு விசாரனை தொடர்கின்றது எல்லை பாதுகாப்பை கடந்தது எவ்வாறு என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மத்திய பொது பாதுகாப்பு அமைச்சர் றல்ப் குட்டேல் இது குறித்த கருத்திற்கான வேண்டுகோளிற்கு பதிலளிக்கவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top