ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து வீர வரலாறாகிப் போன தியாக தீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.


யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் கி.கிருஸ்ணமீனன் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.


பல்கலைக்கழக பதில் துணைவேந்தரும், விஞ்ஞான பீடாதிபதியுமான கலாநிதி பிரின்ஸ் ஜெயதேவன் பொதுச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்த நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.


தொடர்ந்து மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் உட்பட கலந்து கொண்ட அனைவரும் மலர் தூவி தியாக தீபத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.


விரிவுரையாளர்கள், மாணவர்களின் நினைவுரைகள் இடம்பெற்ற அதே நேரம் தியாகி திலீபனின் அகிம்சைப் போராட்ட வரலாற்றை விளக்கும் காணொளிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
