News

ரஷியாவில் ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம் தீப்பிடித்த விபத்தில் 18 பேர் காயம்!

ரஷியாவின் சோச்சி நகரில் இன்று ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்ற விமானம் தீப்பிடித்த விபத்தில் 18 பேர் காயமடைந்தனர்.

ரஷியா நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் இருந்து தென்பகுதியில் உள்ள சோச்சி நகருக்கு 164 பயணிகளுடன் வந்த போயிங் 737-800 ரக தனியார் விமானம் இன்று அதிகாலை சோச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது.

அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்த நிலையில் தரையிறங்கியதும் உரிய நேரத்தில் ‘பிரேக்’ போடுவதற்கு விமானி தவறிவிட்டதால் ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்ற அந்த விமானத்தில் திடீரென்று தீப்பிடித்தது.பயணிகள் அனைவரும் அலறியுள்ளனர். அதன் பின் உடனடியாக அவசர வழி திறக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பயணிகள் உயிர் பயத்தின் காரணமாக விமானத்தின் சுமார் 16 அடி உயரத்திலிருந்து குதித்துள்ளனர். இந்த சமப்வத்தின் காரணமாக 18 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் தங்கள் குழந்தைகளை காப்பாற்றிக் கொள்வதற்காக, விமானத்தில் இருந்த படி கீழே தூக்கி எரிந்துள்ளனர். அப்போது கீழே இருந்த பயணிகள் குழந்தைகளை பிடித்து காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விமானத்தில் இருந்த பயணி கூறுகையில், விமானம் தரையிரக்கப்படுவதால், பயணிகள் அனைவரும் கை தட்டிக் கொண்டிருந்தோம்.

அப்போது திடீரென்று விமானத்தின் இடது பக்கத்தில் ஏதோ ஒரு சத்தம் கேட்டது, அதன் பின் அவசர வழி திறக்கப்பட்டது. உடனடியாக அனைவரும் வெளியேறினர். சிலர் அந்த வழியே இறங்காமல், விமானத்தில் இருந்த படியே வெளியில் குதித்தனர். தீப்பிடித்தது தெரிந்ததால் உள்ளே இருந்த குழந்தைகளை காப்பாற்ற சிலர் கீழே இருந்த பயணிகளிடம் தூக்கி எறிந்தனர்.

இதை கண்ட சோச்சி விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி உடனடியாக விரைந்துவந்த தீயணைப்பு வாகனங்கள் சுமார் பத்து நிமிடம் போராடி விமானத்தில் பற்றிய தீயை அணைத்து பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

இந்த மீட்பு நடவடிக்கையின்போது தீயணைப்பு படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தெரிகிறது. ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த விபத்தில் காயமடைந்த 18 பயணிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்குள்ளான விமானத்தின் என்ஜின் மற்றும் இறக்கை பகுதி எரிந்திருக்கும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top