Canada

ரொறன்ரோவில் TAXIகளை மறித்து கொள்ளை! 3 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு.

ரொறன்ரோ பகுதிகளில் வடகை வண்டிகளை மறித்து துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட மூவரை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரங்களில் இடம்பெற்ற குறித்த சம்பவங்கள் தொடரிலேயே 3 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வுகள் கடந்த ஓகஸ்ட் 26, செப்டெம்பர் 15 இல் சுமார் 13 கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

இதன் போது கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் பணம் , டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகள், அடையாள அட்டைகள் தொலைபேசி என பலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் கடந்த திங்கட்கிழமை 3 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 21 வயதுடைய ஜேர்மெய்ன் எட்வர்ட்ஸ், 20 வயதுடைய பிரின்ஸ் ஓபுசு மற்றும் 19 வயதுடைய கெவின் பிபீடோ என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களை அடுத்த வாரம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ரொறன்ரோ பொலிஸார் கூறியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top