Canada

ரொறன்ரோ டவுன்ரவுன் வீதிச் சந்திப்பு பகுதி ஒன்றில் பெண் ஒருவர் மீது சுத்தியலால் தாக்குதல்

ரொறன்ரோ டவுன்ரவுன் பகுதியில், மக்கள் நடமாட்டம் உள்ள வீதிச் சந்திப்பு பகுதி ஒன்றில் பெண் ஒருவர் மீது சுத்தியலால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lake Shore Boulevard West மற்றும் Rees Street பகுதியில், கடந்த வியாழக்கிழமை மாலை 6.40 மணி அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Lake Shore Boulevard Westஇன் கிழக்கு நோக்கிய வழித்தடத்தில், குறித்த அந்த பெண் கார் ஒன்றைச் செலுத்திச் சென்றதாகவும், அதே திசையில் உந்துருளியைச் செலுத்திச் சென்றவருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன்போது உந்துருளியை நிறுத்திவிட்டு வந்த நபர், காரில் இருந்த பெண்ணை சுத்தியலால் தாக்கியதாகவும் விசாரணை பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதன்போது அவரது காரும் கடுமையான சேதங்களுக்கு உள்ளான நிலையில், தாக்குதலை நடாத்திய நபர் சிறிது நேரத்தில் உந்துருளியில் ஏறி, மேற்கு நோக்கித் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

மேலும், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், இச்சம்பவத்தினை நேரில் பார்த்தோர் அல்லது அது குறித்து தகவல் அறிந்தவர்கள் தம்மைத் தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top