ரொறொன்ரோவின் பிரபல்யமான கடைத்தொகுதி துப்பாக்கிதாரி!

கடந்த வியாழக்கிழமை ரொறொன்ரோ, யோர்க் டேல் மாலில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான சந்தேக நபரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் 3மணியளவில் குறிப்பிட்ட மோலில் துப்பாக்கி சத்தம் கேட்டதாக பொலிசார் அழைக்கப்பட்டனர்.
மாலிற்குள் இரண்டு குழு மனிதர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக துப்பாக்கி சூடுகள் இரண்டு சுடப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து பிரபல்யமான நோர்த் யோர்க் கடைத்தொகுதி மையத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
துப்பாக்கி சூட்டில் எவரும் பாதிக்கப்படவில்லை. மூவர் தீவிர கவலையடைந்த நிலையில் காணப்பட்டதால் அவசர மருத்துவ சேவையினர் அவர்களிற்கு சிகிச்சை அளித்தனர். அவர்களில் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். 20-வயதுடைய ஷியோன் சங்கர்-பிகரி என்வர் அவராவார். இந்நபர் கடைசியாக வாடன் அவெனியு மற்றும் steels அவெனியு கிழக்கு பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் 5மணியளவில் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நபர் ஆயுதம் வைத்திருப்பதாகவும் ஆபத்தானவர் எனவும் கருதப்படுகின்றார். இந்த வருடத்தின் கடைசி உயர் ரக சூட்டு சம்பவ தொடர்ச்சி என கூறப்பட்டுள்ளது. யூலை மாதம் ரொறொன்ரோ கிறீக் ரவுனில் இடம்பெற்ற வன்செயலில் இருவர் கொல்லப்பட்டனர்.
ஒரு மாதம் முன்னராக இரு இளம் பெண்கள் விளையாட்டு மைதானமொன்றில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தனர். சில நாட்கள் பின்னர் மரண சடங்கில் கலந்து விட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் வாகனம் செலுத்தியவாறு சுடப்பட்டார். இச்சம்பவம் தெருக்கும்பல் சம்பந்தப்பட்டதென கருதப்பட்டது.